விழுப்புரம் பகுதியில் ரூ.115.38 கோடியில் உயர்மட்ட பாலங்கள் அமைப்பு
விழுப்புரம்: விழுப்புரம் பகுதியில் நகாய் சார்பில், 115.38 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட மேம்பால பணிகளை, கலெக்டர் ஆய்வு செய்தார்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நகாய் சார்பில், முத்தாம்பாளையம், எல்லீஸ் சத்திரம், இருவேல்பட்டு மற்றும் அரசூர் பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், நேற்று நேரில் ஆய்வு செய்தார்.பின், அவர் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், எல்லீஸ்சத்திரம் பகுதியில், 22.65 கோடி ரூபாய், இருவேல்பட்டில் 18.03 கோடி ரூபாய், அரசூர் பகுதியில் 46.98 கோடி ரூபாய் மதிப்பிலும் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.மேலும், 27.72 கோடி ரூபாய் மதிப்பில், முத்தாம்பாளையம் அருகில், மேம்பாலம் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது' என்றார்.