உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விழுப்புரம்; மாவட்டத்தில், தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தில், உயர்வுக்கு படி என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரி அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் திறன் மேம்பாட்டுக்கழக உதவி இயக்குநர் நடராஜன் வரவேற்றனர். விழுப்புரம் சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தனர். லட்சுமணன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட திறன் அலுவலர் லாவன்யா தொழில் வழிகாட்டுதல் குறித்தும், முன்னோடி வங்கி மேலாளர் நசீர் கல்வி கடன் குறித்தும், கல்வி வல்லுநர்கள் பலர் உயர் கல்விக்கு ஆலோசனை வழங்கியும் பேசினர். இந்நிகழ்வில், பிளஸ் 2 முடித்து உயர்கல்விக்காக காத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்கு, வாய்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர். மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், காணை, கோலியனுார், விக்கிரவாண்டி, கண்டமங்கலம், முகையூர் உள்ளிட்ட ஒன்றியங்களிலிருந்து, மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். இவர்களுக்கு, அரசு பாலிடெக்னிக், அரசு கலை கல்லுாரிகளில் சேர்க்கை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாவட்ட கல்வி அலுவலர் சேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை