உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி

விழுப்புரம்: விழுப்புரத்தில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்போடு அதிரடியாக அகற்றினர்.விழுப்புரம் சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை, புதுச்சேரி நெடுஞ்சாலை ஓரங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்ய முடியாமலும், வாகனங்கள் செல்ல வழியின்றி வியாபாரிகள் பலர் கடைகளை வைத்தும், பெயர் பலகைகளை வைத்தும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் நெடுஞ்சாலை துறை மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்போவதாக சாலையோர வியாபாரிகள், வணிகர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை 10.00 மணி முதல் சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மற்றும் புதுச்சேரி நெடுஞ்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் தன்ராஜ், உதவி பொறியாளர்கள் கவுதம், ராதிகா ஆகியோர் முன்னிலையில் ஊழியர்கள் அதிரடியாக அகற்றினர். பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர் கல்பனா மற்றும் டிராபிக் சப்-இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். ஒலிபெருக்கி மூலம் ஆக்கிரமிப்பு அகற்றுவதாக கூறி எச்சரிக்கை அறிவிப்பு செய்து கடைகள் மற்றும் கடைகளின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை