மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத முதியவர் சடலம்
01-Nov-2024
வானுார் கோரிமேடு அருகே விபத்தில் சிக்கி இறந்த குதிரையை போலீசார் மீட்டு சாலையோரம் புதைத்தனர்.புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச் சாலையில், கோரிமேடு அருகே நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி குதிரை இறந்து கிடந்தது. இறந்த குதிரை யாருடையது என தெரியவில்லை. தகவலறிந்த ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வளர்ப்பு குதிரையா என விசாரணை நடத்தியதில் யாரும் சொந்தம் கொண்டாடவில்லை.அதனைத் தொடர்ந்த போலீசார், டோல் கேட் ஊழியர்களை வரவழைத்து, இறந்த குதிரை மீட்டு, ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் அதே பகுதியில் சாலையோரம் புதைத்தனர்.
01-Nov-2024