உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீ விபத்தில் வீடு சேதம்

தீ விபத்தில் வீடு சேதம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதமானது. விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துார் நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 50; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் குடும்பத்தினரோடு துாங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 5:30 மணியளவில் இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். விசாரணையில் மின் கசிவு காரணமாக வீடு தீப்பற்றி எரிந்தது தெரிய வந்தது. இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் கருகி சேதமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !