உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடுதாரர் தொகையை செலுத்தி பத்திரம் பெறலாம் விழுப்புரம் கலெக்டர் தகவல்

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடுதாரர் தொகையை செலுத்தி பத்திரம் பெறலாம் விழுப்புரம் கலெக்டர் தகவல்

விழுப்புரம், ச விழுப்புரம், கடலுார் மாவட்டத்தில், வீட்டு வசதி வாரிய மனைகள், வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் உரிய தொகை செலுத்தி கிரய பத்திரத்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், விழுப்புரம் வீட்டு வசதிப் பிரிவிற்குட்பட்ட சாலமேடு, கீழ்ப்பெரும்பாக்கம், மகாராஜபுரம் மற்றும் கடலுார் மாவட்டம், வெளிச்செம்மண்டலம், வில்வராயநத்தம், நத்தப்பட்டு, பண்ருட்டி, விருத்தாச்சலம், ஆனைக்குப்பம், பச்சையாங்குப்பம் ஆகிய பகுதிகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதற்கான உத்தரவை பெற்ற கலெக்டர் மற்றும் இதர வங்கி நிறுவனங்கள் மூலம் வீட்டு கடன் பெற்று முழுதொகையும் செலுத்தியுள்ள அரசு ஊழியர்கள், கலெக்டர் மற்றும் இதர வங்கி நிறுவனங்களில் இருந்து மறுப்பின்மை சான்று பெற்று உரிய ஆவணங்களுடன் இவ்வலுவலகத்தில் சமர்ப்பித்து கிரயப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.மேலும், விபரங்கள் அறிய, விழுப்புரம் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை