உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ஜ., ராஜா மீது மனித நேய மக்கள் கட்சி போலீசில் புகார்

பா.ஜ., ராஜா மீது மனித நேய மக்கள் கட்சி போலீசில் புகார்

திண்டிவனம்: பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் ராஜா மீது, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் திண்டிவனம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜான்பாஷா மற்றும் நிர்வாகிகள் திண்டிவனம் போலீசில் அளித்துள்ள புகார் மனு:பா.ஜ., மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா கடந்த 7ம் தேதி சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.,வை தேச விரோதி என கூறியுள்ளார். மதக்கலவரத்தை துாண்டும் வகையில் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ள ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

A P
நவ 09, 2024 23:23

திரு H ராஜா அவர்கள், அப்படி சொன்னதற்கு காரணம் என்னென்ன என்பதை அவரின் பேச்சிலிருந்தே எடுத்துக் போட்டிருக்கலாம். மக்களுக்கு உண்மை தெரிய வேண்டியது நியாயம்தான்.


முக்கிய வீடியோ