உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு துவக்க விழா

சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு துவக்க விழா

விழுப்புரம்; திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி மையம் சார்பில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு துவக்க விழா விழுப்புரத்தில் நடந்தது.விழுப்புரம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு, அமைப்பாளர் பாபு தலைமை தாங்கினார். மகாலட்சுமி குரூப்ஸ் ரமேஷ் முன்னிலை வகித்தார். ராமகிருஷ்ணா கல்விக்குழுமம் செயலாளர் ஸ்ரீமத் சுவாமி பரமசுகானந்த மகராஜ் அருளாசி வழங்கினார். முன்னாள் நகர்மன்ற சேர்மன் ஜனகராஜ், குபேரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.ஆசிரியர் கார்த்திகேயன், சித்தாந்த பயிற்சி வகுப்பு துவக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து மாதேஸ்வர பூஜை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ