உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மினி குடிநீர் தொட்டி திறப்பு விழா

மினி குடிநீர் தொட்டி திறப்பு விழா

விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதூரில் மினி குடிநீர் தொட்டி திறப்பு விழா நடந்தது.விழுப்புரம் நகராட்சி 29வது வார்டுக்கு உட்பட்ட பாரதியார் தெரு மக்களின் கோரிக்கையை ஏற்று, நகராட்சி சார்பில், புதிதாக ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் பம்ப்புடன் கூடிய மினி குடிநீர் தொட்டி 3 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது.இந்த மினி குடிநீர் தொட்டியை நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நேற்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.நிகழ்ச்சியில் கமிஷனர் (பொறுப்பு) ஸ்ரீபிரியா, கவுன்சிலர் கோமதி பாஸ்கர், உதவி பொறியாளர் ராபர்ட் கிளைவ், பணி ஆய்வாளர் ஹரிகரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ