மேலும் செய்திகள்
ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை தேவை
04-Oct-2024
விழுப்புரம்: விழுப்புரம் சட்டசபை தொகுதியில் 19.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 ரேஷன் கடை கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.பொய்யப்பாக்கம், அனிச்சம்பாளையம் கிராமங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று லட்சுமணன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 19.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது.இதன் திறப்பு விழாவிற்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தொடர்ந்து, ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, சேர்மன் சச்சிதானந்தம், பி.டி.ஓ., ராஜவேலு, மாவட்ட கவுன்சிலர் கேசவன், ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், மாவட்ட பிரதிநிதி சிவசங்கர், துணைச் செயலாளர்கள் ஸ்ரீதர், ஜெயந்தி, ஆறுமுகம், இளைஞரணி அமைப்பாளர் அய்யப்பன், ஊராட்சி தலைவர்கள் கண்மணி, சந்திரா, வார்டு உறுப்பினர் பூங்காவனம், கிளைச் செயலாளர்கள் பாபு, வேலு உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
04-Oct-2024