உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்மாற்றிகள் துவக்க விழா

மின்மாற்றிகள் துவக்க விழா

விழுப்புரம்: விழுப்புரம், சாலாமேடு பகுதியில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடந்தது.சாலாமேடு பகுதியில் குறைந்த மின்னழுத்தம் பிரச்னையை தீர்க்க 38வது வார்டில் புகாரி நகரில் 14.35 லட்சம், 36வது வார்டு எழில் நகரில் 9.21 லட்சம், 39வது வார்டு சுமையா கார்டனில் 8.84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மின்மாற்றி அமைப்பதற்கான துவக்க விழா நடந்தது.மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்.எல்.ஏ., புதிய மின்மாற்றிகளை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் வெற்றிவேந்தன், கவுன்சிலர்கள் மணவாளன், சிவா, புருஷோத்தமன், கோமதி பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ