உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தனியார் பூச்சிக்கொல்லி நிறுவனத்தில் ஆய்வு

தனியார் பூச்சிக்கொல்லி நிறுவனத்தில் ஆய்வு

விழுப்புரம்: திண்டிவனத்தில் உள்ள தனியார் பூச்சிக்கொல்லி உற்பத்தி நிறுவனத்தில், கடலுார் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் நடனசபாபதி தலைமையில் உதவி இயக்குநர்கள் விஜயகுமார் (விழுப்புரம்), ஆரோக்கியராஜ் (மரக்காணம்), வேளாண்மை அலுவலர் கீதா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த நிறுவனத்தில் உற்பத்தியாகும் பூச்சிக்கொல்லிகள் சட்ட விதிகளின் படி தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்தும், மாசுக்கட்டுப்பாடு வாரிய சான்றிதழ், பூச்சி மருந்து மூலக்கூறு கொள்முதல் பயன்பாடு மற்றும் உற்பத்தி பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து, நிறுவன சட்டவிதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை