செஞ்சியில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
செஞ்சி : செஞ்சி பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர், எம்.எல்.ஏ., ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது, செஞ்சியில் அரசு தொழில் பயிற்சி கூடம் அமைப்பதற்காக இடங்களை பார்வையிட்டனர். சிறிய அளவில் விளையாட்டு அரங்கம் அமைக்க சந்தை மேடு, அரசு ஆண்கள் பள்ளி, என்.ஆர்., பேட்டையில் இடம் ஆய்வு செய்யப்பட்டது.செஞ்சி 'பி' ஏரியில் தினமும் ஏராளமானோர் நடை பயிற்சி செய்வதால், இங்கு மின்விளக்கு வசதி, பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கை, சிறுவர்களுக்கான விளையாட்டு திடல், திறந்த வெளி உடற்பயிற்சி வசதிகள் மேற்கொள்ள பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.தொடர்ந்து, செஞ்சி அரசு மருத்துவமனையில் 50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தாய் சேய் நல கட்டடத்தை ஆய்வு செய்தனர்.பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் பிரசன்னா, உதவி இயக்குநர் தண்டபாணி, கால்நடை மருத்துவர் மணிமாறன், தாசில்தார் துரைசெல்வம், பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபா சங்கர் உடன் இருந்தனர்.