செண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை விளக்கு பொருத்தும் பணி
மயிலம்: மயிலம் அருகே உள்ள செண்டூர் தேசிய நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் எச்சரிக்கை விளக்கு பொருத்தும் பணி நடந்தது.சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது செண்டூர் கிராமம். இங்கு உள்ள நான்கு முனை சந்திப்பில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் கார் மோதியதில் இறந்தனர்.விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் நான்கு முனை சந்திப்பு பகுதியில் எச்சரிக்கை விளக்குகளை புதிதாக அமைத்தனர். மேலும், சாலையில் வரும் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக சாலையின் இரு புறங்களிலும் மயிலம் போலீசார் சார்பில் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டது.