உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கல்லுாரியில் பன்னாட்டு பயிற்சி கருத்தரங்கு

அரசு கல்லுாரியில் பன்னாட்டு பயிற்சி கருத்தரங்கு

விழுப்புரம் : விழுப்புரம் அரசு கல்லுாரியில் புள்ளியியல் துறை சார்பில் பன்னாட்டுப் பயிற்சி கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். புள்ளியியல் துறைத் தலைவர் சச்சிதானந்தம் வரவேற்றார். 'நிகழ்தகவுப் பரவல்' மற்றும் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சி கருத்தரங்கில், பேராசிரியர்கள் கேரளப் பல்கலைக் கழக சதீஷ்குமார், சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக் கழக இளங்கோவன், அண்ணாமலைப் பல்கலைக்கழக விஜயகுமார் சிறப்புரை ஆற்றினர். தான்சானியா நாட்டின் டோட்மா பல்கலைக் கழக பேராசிரியர் கடே சிறிவாசராவ் இணையவழியில் பங்கேற்று, நிகழ்தகவுப் பரவலின் கோட்பாடுகளை விளக்கினார். கல்லுாரிகளின் புள்ளியியல் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.புள்ளியியல் துறை கவுரவ விரிவுரையாளர் அன்னைசூர்யா நன்றி கூறினார். கருத்தரங்க ஏற்பாடுகளை கவுரவ விரிவுரையாளர்கள் ஜெயகுமார், ஆனந்தி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை