பள்ளிகளில் சர்வதேச யோக தினம்
திண்டிவனம் : திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோக தினம் நடந்தது.நிழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். பள்ளி துணைத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அருள்மொழி வரவேற்றார். மனவளக்கலை பேராசிரியர்கள் ஆசைதம்பி, பழனிமூர்த்தி ஆகியோர், மாணவர்களுக்கு யோகா பயிற்சி மற்றும் யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசினர். ஜெயபாஸ்கர், கோமதீஸ்வரி, கோபிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியை ஆசிரியை ஷாலினி தொகுத்து வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார். கரும்வம்பாக்கம்
கரும்வம்பாக்கம் தரம்சந்த் சி.பி.எஸ்.சி., பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி செயலாளர் ஜின்ராஜ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சாந்தி பாலச்சந்தர் முன்னிலை விகித்தார். உடற்பயிற்சி இயக்குநர் முருகையன், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 12 படி நிலைகளுடன் கூடிய சூரிய நமஸ்காரத்துடன் ஆசனங்களை செய்தனர். பள்ளி தாளாளர் பப்ளாசா, பொருளாளர் நவீன்குமார், நிர்வாக இயக்குநர் அனுராக் ஆகியோர் பாராட்டி பேசினர். மரக்காணம்
பொம்மையர்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த 'ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம்' என்ற நிகழ்ச்சிக்கு, கல்லுாரி செயலாளர் சிவக்குமார் யோகாவின் முக் கியத்துவம் குறித்து பேசினார். முதல்வர் பூமாதேவி துவக்கவுரையாற்றினார். ஆங்கிலத்துறை பேராசிரியை கவிதா வரவேற்றார்.விழாவில் பேராசிரியைகள், மாணவிகள் யோகா செய்தனர். தொடர்ந்து உறுதிமொழியேற்றனர். விழுப்புரம்
வளவனுார் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில் யோகா தினம் கொண்டாப்பட்டது. நிகழ்ச்சியில், லட்சுமணன் எம்.எல்.ஏ., தி.மு.க., நகர செயலாளர் ஜீவா, வழக்கறிஞர் சுரேஷ், அக்னி குழுமம் நிறுவனர் சுப்ரமணியன், புதுச்சேரி மாநில பா.ஜ., பிரமுகர் செல்வகணபதி, சிவாச்சாரியார் முருகன் சித்தர், பிரம்மாகுமாரர்கள், பிரம்மாகுமாரிகள் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகி செல்வமுத்துக்குமரன் செய்திருந்தார்.