மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
25-Jul-2025
செஞ்சி:செஞ்சியில் ஒன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராஜசேகர், தலைமையில் திண்டிவனம் அரசு மருத்துவமனை எலும்பு முறிவு டாக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் தேர்வை நடத்தினர். மஸ்தான் எம்.எல்.ஏ., தேர்வானவர்களுக்கு உத்தரவை வழங்கினார். ஒன்றிய சேர்மன்கள் விஜயகுமார், அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்செல்வன், பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபாசங்கர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் இளம்வழுதி, ஊராட்சி தலைவர்கள் சங்க தலைவர் ரவி, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சிவபிரகாசம், ஒன்றிய அவை தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, செந்தில் கலந்து கொண்டனர்.
25-Jul-2025