உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  திண்டிவனத்தில் ஆய்வு குழுவினர் அதிரடி: 1,200 கிலோ விதைகளை விற்க தடை

 திண்டிவனத்தில் ஆய்வு குழுவினர் அதிரடி: 1,200 கிலோ விதைகளை விற்க தடை

விழுப்புரம்: திண்டிவனம், மரக்காணத்தில் விதை ஆய்வு துறையினர் ஆய்வு மேற்கொண்டு, 1200 கிலோ தரமற்ற விதைகளை விற்க தடை விதித்தனர். மரக்காணம் அடுத்த முருக்கேரி பகுதி விதை விற்பனை நிலையங்களை, விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநர் சரவணன் தலைமையில் விதை ஆய்வாளர்கள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, கடைகளில் இருந்த தரமற்ற 45.841 கிலோ தர்பூசணி விதைகள், 160 கிலோ உளுந்து, 990 கிலோ எள், 5 கிலோ பூசணி விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து, நடவடிக்கை எடுத்தனர். விவசாயிகளுக்கு, விற்பனை பட்டியல், பயிர் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் குறிப்பிட்டு கையொப்பம் பெற்று ரசீது வழங்க வேண்டும். விற்பனை பட்டியல் நகல் பராமரிக்க வேண்டும். இந்த விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ