தாட்கோ பயிற்சியில் சேர அழைப்பு
விழுப்புரம் :சென்னையில் நடைபெற உள்ள தாட்கோ பயிற்சியில் சேர தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தோடு, தாட்கோ இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஜி.எஸ்.டி., மற்றும் வருமான வரி தொழில்நுட்பம், தொழில் உற்பத்தி பயிற்சி, டிஜிட்டல் திறன்களில் ஐ.டி.இ.எஸ்., பி.பி.ஓ. பயிற்சி, இணைய தொழில்நுட்ப பயிற்சி, டிஜிட்டல் மார்கெட்டிங் பயிற்சிகள் வழங்க உள்ளது.பயிற்சியில் சேர 21 முதல் 30 வயது வரை உள்ளவர்கள், கடந்த 2021ம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தோர் விண்ணப்பிக்கலாம்.பயிற்சியை முழுமையாக முடிப்பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புக்கு வழிவகை செய்யப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.பயிற்சி பெற தாட்கோ இணையதளம் www.tahdco.comஎன்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். பயிற்சி 55 நாட்கள் அளிக்கப்படும். சென்னையில் உள்ள விடுதியில் தங்கி பயிலும் வசதி மற்றும் உணவுக்கான செலவு தாட்கோ மூலம் வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.