மேலும் செய்திகள்
திருப்புவனத்தில் வைகை ஆற்றங்கரை சீரமைப்பு
13-Jan-2025
பொங்கல் பண்டிகை போகி பண்டிகையுடன்நேற்று தொடங்கியுள்ளது. இன்று தைப்பொங்கல், நாளை மாட்டு பொங்கல், மறுநாள் காணும் பொங்கல் என ஒரு வாரம் கொண்டாட்டம் தொடர்கிறது. பொங்கல் பண்டிகையின் நிறைவாக 18ம் தேதி ஆற்றுத்திருவிழா நடக்க உள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள், விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் பிடாகம், பேரங்கியூர், எல்லீஸ்சத்திரம், அரகண்டநல்லூர், மணலுார்பேட்டை, சின்னகள்ளிப்பட்டு மற்றும் விக்கிரவாண்டி, வானூர் பகுதிகளில் சங்கராபரணி ஆற்று பகுதிகளிலும் பல இடங்களில் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.ஆற்றங்கரைகளில் ஒன்று கூடி நீராடி, பொருள்களை வாங்கி மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஆண்டு தோறும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தந்த கிராமங்களிலிருந்து தீர்த்தவாரி உற்சவத்திற்கும் கோவில் உற்சவர்கள் பங்கேற்பதும் வழக்கமாக உள்ளன.இந்நிலையில், இந்தாண்டு ஆற்றுத் திருவிழாவிற்கு பொது மக்களும், வியாபாரிகள் தயாராகி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இந்தாண்டு ஆற்றுத்திருவிழா நடக்காது. அனுமதியில்லை என சமூக வலை தளங்களில் தகவல் பரவி வருவதால், பொது மக்கள், வியாபாரிகள், கோவில் நிர்வாகத்தினரும் சந்தேகத்தில் உள்ளனர்.பெஞ்சல் புயல் வெள்ளம் காரணமாக ஆறுகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், விபத்து ஏற்படும் என்று தடை விதிக்க உள்ளதாக தகவல் பரவி வருவதாக அவர்கள் கூறி வருகின்றனர்.இதனால், ஆற்றுத்திருவிழா விற்பனைக்கு பன்னீர் கரும்பு, காய்கறிகள், விளையாட்டு பொருள்கள் போன்றவை முன் கூட்டியே வாங்கி வந்து விற்பதற்கும், கோவில் உற்சவர்கள் தீர்த்தவாரிக்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் முன்னேற்பாடுகளை செய்யாமல் தவித்து வருவதாக கூறுகின்றனர். இதனால், அரசு தரப்பில் முன் கூட்டியே அறிவிப்பை வெளியிட வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆற்றுத் திருவிழாவிற்கு இதுவரை தடை போன்ற எவ்வித உத்தரவும் இல்லை என குறிப்பிட்டனர்.
13-Jan-2025