உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஜெ.ஆர். மருத்துவ கல்லுாரி சாதனை

ஜெ.ஆர். மருத்துவ கல்லுாரி சாதனை

திண்டிவனம்: துாக்கிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முதியவரின் உயிரை காப்பாற்றியதற்காக, ஜெ.ஆர்.மருத்துவ கல்லுாரி குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திண்டிவனம் அருகே உள்ள ரெட்டணை பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் மன உளைச்சலால் துாக்கிட்டு கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து அவரை, திண்டிவனம் அருகே கீழ் எடையாளத்திலுள்ள ஜெ.ஆர்.மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் சீனுவாசன் தலைமையிலான மருத்துவகுழுவினரின் தீவிர சிகிச்சைக்கு பிறகு, அந்த முதியவர் முழுமையாக குணமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முதியவரை உயிர்பிழைக்க வைத்த கல்லுாரியின் சேர்மன் ஜெகத்ரட்சகன், டாக்டர் நிஷா, கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், மருத்துவகண்காணிப்பாளர் காசிநாதன், துணை கண்காணிப்பாளர் வினோபாரதி ஆகியோருக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ