உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறைச்சாலையில் நீதிபதி திடீர் ஆய்வு

சிறைச்சாலையில் நீதிபதி திடீர் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வேடம்பட்டு சிறைசாலையில் முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி நேற்று திடீர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் அருகே வேடம்பட்டு சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு, நேற்று முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மணிமொழி, கலெக்டர் பழனி ஆகியோர் ஆய்வு செய்தனர். அங்குள்ள கைதிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சிறைச்சாலை கட்டடங்களின் கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை, முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி, கலெக்டர் பழனி ஆகியோர் ஆய்வு செய்தனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ஜெயச்சந்திரன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புஷ்பராணி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட மேலாளர் (குற்றவியல்) சீனிவாசன், சிறை அலுவலர் அன்புமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை