உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஜூடோ சங்க நிர்வாகிகள் தேர்வு

 ஜூடோ சங்க நிர்வாகிகள் தேர்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அமைச்சூர் ஜூடோ சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம், விழுப்புரத்தில் நடந்தது. ஜூடோ சங்க நிர்வாகிகள் தேர்தல் மேற்பார்வையாளராக சேலம் மாவட்டம் ஜூடோ சங்க செயலாளர் மாரிமுத்து மேற்பார்வையில், சட்ட ஆலோசகர் எழிலரசன் முன்னிலையில் தேர்தல் நடந்தது. இதில், ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி ராமமூர்த்தி கவுரவ தலைவராகவும், ஓய்வு பெற்ற ரயில்வே அலுவலர் குணசேகரன் சங்க தலைவராகவும், உதவி தலைவராக முருகன், ஜே.முருகன் செயலாளராகவும், இளமுருகன் உதவி செயலாளராகவும், எழிலரசன் பொருளாளராகவும், ராமச்சந்திரன், பிரபு, வீரசோழன், சிவசுப்ரமணியன், அமான், பிரபு, சுரேஷ் உள்ளிட்டோர், மாவட்ட ஜூடோ சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜியாவுதீன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ