மேலும் செய்திகள்
சித்ரா பவுர்ணமி வழிபாடு திண்டுக்கல்
13-May-2025
வானுார், : திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம் நடந்தது.வானுார் அடுத்த திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மன், சந்திர மவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர் தனித்தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு ஒவ்வொரு பவுர்ணமியின் போதும், ஜோதி தரிசனம் நடைபெறும். நேற்று முன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு வக்ரகாளியம்மன், சந்திர மவுலீஸ்வரர், வரதராஜ பெருமாள், வள்ளி, தெய்வானை சுப்ரமணியர் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது.நள்ளிரவு 12:00 மணிக்கு பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசன வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சக்திவேல், செயல் அலுவலர் ஜெயக்குமார், ஆய்வாளர் உமாமகேஸ்வரி, குருக்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
13-May-2025