உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கஞ்சி கலயம் ஊர்வலம்

கஞ்சி கலயம் ஊர்வலம்

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலயம் ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியையொட்டி, நேற்று காலை 9:00 மணி முதல் வழிபாட்டு மன்றத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, மாவட்ட பொருளாளர் மணிவாசகம், துணைத் தலைவர் மோகன கிருஷ்ணன் முன்னிலையில் சக்தி வழிபாடு நடந்தது. பின், மாவட்ட தலைவர் மூர்த்தி கஞ்சி கலயம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். திரளான பக்தர்கள் முளைப்பாரி மற்றும் கஞ்சி கலயம் சுமந்து ஊர்வலமாக சென்றனர். ஏற்பாடுகளை கண்டாச்சிபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் அருள்ஜோதி, அன்பு, சிவக்குமார் ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை