மேலும் செய்திகள்
தி.மு.க., சாதனை விளக்க கூட்டம்
11-May-2025
தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
29-May-2025
விழுப்புரம்: மயிலம் ஒன்றியம் தீவனுாரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் விழா நடந்தது.தீவனுார் பஸ் நிலையம் அருகே நடந்த விழாவிற்கு மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் பரிதா சம்சுதீன் வரவேற்றார்.தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது.முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் உமா ஞானசேகர், கீதாசிவகுமார், சாந்தகுமார், ஊராட்சி தலைவர் பூங்கா பாக்யராஜ், விவசாய அணி அமைப்பாளர் பாஸ்கர், அவைத்தலைவர் சேகர், மாவட்ட பிரதிநிதிகள் சிவானந்தம், சேகர், ஞானசேகர், வழக்கறிஞர் அணி கமலக்கண்ணன், வடக்கு ஒன்றிய துணை செயலாளர்கள் சண்முகம், சித்ரா ஏழுமலை, விவசாய தொழிலாளர் அணி ரமேஷ், மாணவரணி விஜயகுமார், தொழிலாளர் அணி வேல்முருகன், கிளை செயலாளர் பிரபு, நிர்வாகிகள் முனியாண்டி, அன்பு சேகர், உதயவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
11-May-2025
29-May-2025