மேலும் செய்திகள்
தி.மு.க., சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்
25-Jun-2025
வானுார்: கிளியனுார் மேற்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில் தைலாபுரம் ஊராட்சியில் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க.,அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர் தலைமை தாங்கினார். கிளியனுார் மேற்கு ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புஷ்பராஜ், மாரிமுத்து, வானுார் ஒன்றிய முன்னாள் சேர்மன் சிவா, ஊராட்சி தலைவர்கள் சிவக்குமார், தனபால்ராஜ், வேலு, தெய்வவிநாயகம், வீரப்பன், பாபு, புஷ்பராஜ், மாவட்ட கவுன்சிலர் கவுதம், ஒன்றிய கவுன்சிலர்கள் முனுசாமி, மகாலட்சுமி ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை பேச்சாளர்கள் மணிவேலன், இன்பக்குமாரன், வழக்கறிஞர் முனுசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துவேல், தி.மு.க., நிர்வாகிகள் மணி, அய்யப்பன், கிருஷ்ணராஜ், ரமேஷ், அழகேசன், ஐ.டி., பிரிவு செயலாளர் விஜயகுமார், செந்தமிழ், நந்தன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயக்குமார் நன்றி கூறினார்.
25-Jun-2025