ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களில் கும்பாபிேஷகம் விழா
விழுப்புரம்: விழுப்புரம் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களில் கும்பாபிேஷகம் விழா நடந்தது. விழாவையொட்டி, விழுப்புரம், நாராயணா நகர் சக்தி பீடம் மற்றும் கிழக்கு பாண்டி ரோடு சக்தி பீடத்தில் காலை சிறப்பு யாகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு மேல் நாராயணா நகர் சக்தி பீடத்திலும், காலை 10:00 மணிக்குமேல் பாண்டி ரோடு சக்தி பீடத்திலும் கும்பாபிேஷகம் விழா நடந்தது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் சக்தி பீட கலசங்களுக்கு புனீத நீர் ஊற்றினார். ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் மூர்த்தி, பொருளாளர் மணிவாசகர், வட்ட தலைவர் பாலசுப்ரமணியம், சுகுமார், பார்த்தசாரதி, மோகனகிருஷ்ணன், பொறுப்பாளர்கள் சீதாலட்சுமி, சாவித்திரி, தேவராஜ், குருசந்திரன், சுந்தரமூர்த்தி செய்திருந்தனர். விழாவில், என்.டி.ஆர்., எர்த் மூவர்ஸ் தொழிலதிபர் ராஜா, மரகதபுரம் ரமேஷ், தளவானுார் அர்ஜூனன் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.