உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 2ம் தேதி கும்பாபிஷேகம்

வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 2ம் தேதி கும்பாபிஷேகம்

விழுப்புரம்: விழுப்புரம் காமராஜர் வீதி, ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வரும் 2ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது.இவ்விழா குறித்து ஆர்ய வைஸ்ய சமூகம் தலைவர் பிரகாஷ், நிருபர்களிடம் கூறியதாவது; ஆந்திரா மாநிலம், பெனுகுண்டாவில் கன்னிகா பரமேஸ்வரி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. தமிழகத்திலும் 300க்கும் மேற்பட்ட கோவில் உள்ளது. விழுப்புரம் காமராஜர் வீதியில், கடந்த 1968 ம் ஆண்டு, ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் கட்டுமான பணி துவங்கி, கடந்த 1982ம் ஆண்டு முடிந்து சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கும்பாபிஷேகம் செய்து வைத்தார். கடந்த 2003ம் ஆண்டு, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இணைந்து கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். வரும் 2ம் தேதி இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது என கூறினார்.துணை தலைவர் குமார், செயலாளர் குபேரன், துணை செயலாளர் குணசேகரன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகஸ்தர்கள் தட்சிணாமூர்த்தி, பாபு, சீனுவாசன், கோபிநாத், சமூக மேலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ