உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்குவாரியில் தவறி விழுந்த கூலி தொழிலாளி பலி

கல்குவாரியில் தவறி விழுந்த கூலி தொழிலாளி பலி

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கல்குவாரியில் தவறி விழுந்த கூலி தொழிலாளி இறந்தார்.தர்மபுரி மாவட்டம், தளவநத்தம் அடுத்த அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுந்தரம் மகன் சிவக்குமார், 50; விழுப்புரம் மாவட்டம், காணை பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த 8 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி கல் குவாரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென கால் தவறி கீழே பாறையில் விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை