வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அந்தக்கால நாளந்தா மற்றும் தட்சசீலா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதிப்புக்கள் இலவசமாக உண்டி மற்றும் உறையுளுடன் வழங்கப்பட்டது கல்விகற்க சாதி தடையில்லை அரசர்கள் சுற்றியுள்ள பல நூறு கிராமங்களின் வருவாயை கல்விக்கு ஒதுக்கினார்
விழுப்புரம் : திண்டிவனம் அடுத்த ஓங்கூர் தட்சசீலா பல்கலைக்கழகம் மாணவர்களின் பாட திட்டங்களையொட்டி, நர்சிங் கல்லுாரி மாணவர்களின் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.தட்சசீலா பல்கலைக்கழக வேந்தர் தனசேகரன், இணை வேந்தர்கள் ராஜராஜன், டாக்டர் நிலா பிரியதர்ஷினி ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் நடந்த துவக்க விழாவிற்கு, மருத்துவ புலம் டீன் ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். துணைவேந்தர் விவேக் இந்தர் கோச்சர் முன்னிலை வகித்தார். பதிவாளர் செந்தில் சிறப்புரையாற்றினார்.சென்னை மாெஹர் பல்கலைக்கழகத்தின் மீனாட்சி செவிலியர் கல்லுாரி முதல்வர் பாபியோலா மெர்சி தனராஜ், செவிலியர் பணியின் உன்னதம் பற்றி விளக்கி, அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வி கற்க வேண்டும் என பேசினார். இணை பதிவாளர் ராமலிங்கம், அகாடமிக் டீன் சுப்ரமணியன், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறை டீன் சுபலட்சுமி, கலை, அறிவியல் துறை டீன் தீபா உட்பட துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.செவிலியர் கல்லுாரி முதல்வர் கஸ்துாரி நன்றி கூறினார்.