உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நிலம், மனை முகவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

நிலம், மனை முகவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் நிலம், மனை முகவர்கள் சங்கம், கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் வெங்கடேசன் (எ) அண்ணாதுரை தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் முருகன், துணைச் செயலாளர் ஜாபர் அலி, நிர்வாகிகள் அன்பழகன், டேவிட், ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், மறைந்த முன்னாள் கவுரவ தலைவர் ரவிச்சந்திரனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, விடுபட்ட பட்டாவை ஆன்லைன் மூலம் விரைவாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலைவாசி ஏற்றத்தை குறைக்க வேண்டும். மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை