| ADDED : நவ 13, 2025 06:54 AM
விழுப்புரம்: மாநில அளவிலான மகசூல் போட்டியில் நில உரிமையாளர் கள், குத்தகைதாரர்கள் பங்கேற்கலாம் என விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: மாநில அளவிலான மகசூல் போட்டி ஆண்டுதோறும் மாநில அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், முதல் பரிசு 2.50 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு 1.50 லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசு 1 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் செம்மை நெல், பாரம்பரிய நெல், கம்பு, கேழ்வரகு, திணை, கரும்பு, எள், வேர்க்கடலை, உளுந்து மற்றும் பச்சைப்பயறு ஆகிய பயிர்களில் பயிர் மகசூல் போட்டியில் பங்கேற்கலாம். இதற்கானபதிவுக் கட்டணம் 150 ரூபாய். இந்த போட்டிகளில் நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் 5 ஏக்கர் அளவில் போட்டிக்கான பயிரை சாகுபடி செய்திருக்க வேண்டும். மேலும், மாவட்ட அளவிலான பயிர் மகசூல் போட்டியிலும் நெல், கம்பு, உளுந்து, கரும்பு பயிரிடும் விவசாயிகள் கலந்து கொள்ளலாம். இதற்கான பதிவு கட்டணம் 100 ரூபாய். இது பற்றி மேலும் விப ரங்களுக்கு, வட்டார வேளாண் விரிவாக் க மையத்தை அணுகலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.