உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உழவரைத் தேடி வேளாண் திட்டம் வேம்பியில் துவக்க விழா

உழவரைத் தேடி வேளாண் திட்டம் வேம்பியில் துவக்க விழா

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியம் வேம்பியில், உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் துவக்க விழா நடந்தது.விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலை துறை சார்பில் வேம்பியில் நடந்த விழாவிற்கு, ஊராட்சி தலைவி தனலட்சுமி ரவி, ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி முன்னிலை வகித்தனர். உதவி தோட்டக்கலை அலுவலர் அஜித் குமார் வரவேற்றார்.உதவி இயக்குனர் ஜெய்சன் தலைமை தாங்கி பேசியதாவது; விக்கிரவாண்டி வட்டரத்தில் உள்ள 58 கிராமங்களில் திட்டத்தை செயல்படுத்தி இதன் மூலம் வேளாண்மை விரிவாக்க சேவைகள், அரசின் திட்டங்கள் உழவர்களுக்கு அவர்களின் கிராமத்திலேயே வழங்கப்படும் எனவும், திட்ட முகாம்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை 2 மற்றும்,4வது வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்படும் என கூறினார்.உதவி தோட்டக்கலை அலுவலர் புனிதா, துணை வேளாண்மை அலுவலர் ரமேஷ் குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள், முன்னோடி விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ