ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம் துவக்க விழா
அவலுார்பேட்டை, : மேல்மலையனுாரில் 'ஊட்டச்சத்து உறுதி செய்' திட்டம் துவக்க விழா நடந்தது.பி.டி.ஓ., அலுவலகத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் 2ம் கட்ட துவக்க விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலு வலர் சவுமியா வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., திட்டத்தை துவக்கி வைத்து 190 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசினார். ஒன்றிய துணைச் சேர்மன் விஜயலட்சுமி, பி.டி.ஓ., சையத் முகமத், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.