உள்ளூர் செய்திகள்

நூலக அலுவலர் ஆய்வு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் புதிய நூலக கூடுதல் கட்டடத்திற்கு இடம் தேர்வு செய்ய மாவட்ட நூலக அலுவலர் ஆய்வு செய்தார்.தமிழக அரசு விக்கிரவாண்டியில் புதிய நூலக ம் கட்ட மத்திய அரசின் மான்ய நிதி குழுவில் ரூபாய் 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளளது. இதை அடுத்து புதிய கூடுதல் நூலக கட்டடம் கட்ட விக்கிரவாண்டி பேரூராட்சி மூன்றாவது வார்டு வெங்கடேஸ்வரா நகரில் தண்ணீர் டேங்க் அருகில் மாவட்ட நூலக அலுவலர் காசிம் ஆய்வு செய்து இடத்தை தேர்வு செய்தார்.இதில் பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், இளநிலை உதவியாளர் ராஜேஷ், கவுன்சிலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை