சாராய வியாபாரி குண்டாசில் கைது
விழுப்புரம்: விழுப்புரம் அருகே குட்கா கடத்தலில் கைதான மரக்காணம் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் மைக்கேல்இருதயராஜ் தலைமையிலான போலீசார், கடந்த மாதம் ஆனத்தூர் பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், அவர், மரக்காணத்தைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி முருகன் மகன் மதன்குமார்,28; என்பதும், பைக்கில் குட்கா கடத்தி வந்ததும் தெரிந்தது. அவரிடமிருந்து 205 கிலோ எடையுள்ள குட்காவை கைப்பற்றிய போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனையடுத்து, அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில் எஸ்.பி., சரவணன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமான், மதன்குமாரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து, விழுப்புரம் சிறையிலிருந்த மதன்குமாரை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.