வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மூன்று மணி நேரத்துக்கு ரூபாய் 3000/- வாடகை கட்டினால் என்ன நிகழ்ச்சி வேண்டுமானாலும் செய்யலாமாம். இதுக்கு இவ்வளவு பில்டப்
மேலும் செய்திகள்
மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்
19-Aug-2025
விழுப்புரம்; தமிழக முதல்வர் ஆக்ஸ்போர்டு பல்கலையில் சிறப்புரையாற்றும் நிகழ்வு, மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், விழுப்புரத்தில் எல்.இ.டி., திரைகள் மூலம் காட்சிப்படுத்தப்படுகிறது. விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன், எம்.எல்.ஏ., அறிக்கை: தமிழக முதல்வர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்து, அங்கு நடக்கும் 'சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள்' மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வினை, பொதுமக்கள் மற்றும் தி.மு.க., தொண்டர்கள் கண்டுகளிக்கும் வகையில், இன்று காலை 10:00 மணிக்கு, விழுப்புரம், கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அரங்கில் எல்.இ.டி., திரைகளில் ஒளிபரப்ப உள்ளது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய மற்றும் பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வினை கண்டுகளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று மணி நேரத்துக்கு ரூபாய் 3000/- வாடகை கட்டினால் என்ன நிகழ்ச்சி வேண்டுமானாலும் செய்யலாமாம். இதுக்கு இவ்வளவு பில்டப்
19-Aug-2025