உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ் மீது லாரி மோதி விபத்து

பஸ் மீது லாரி மோதி விபத்து

மயிலம்: மயிலம் அருகே அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. கூட்டேரிப்பட்டு அருகே நேற்று முன்தினம் இரவு 9 :00 மணிக்கு சென்னையில் இருந்து அரசு பஸ் விழுப்புரம் நோக்கி சென்றது. அப்போது அதே மார்க்கத்தில் வந்த லாரி பஸ் மீது மோதியது. இதில் பஸ்ஸில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். லாரியை ஓட்டி வந்த சேலம், சாலை மாநகரை சேர்ந்த மாரிமுத்து 53; காயம் அடைந்தார். மயிலம் போலீசார் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ