உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாரி கவிழ்ந்து விபத்து

லாரி கவிழ்ந்து விபத்து

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தர்பூசணி லோடு ஏற்றிவந்த மினி லாரி சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.மரக்காணம் அடுத்த நடுக்குப்பத்தை சேர்ந்தவர் சாம்பசிவம், 45; லாரி டிரைவர். இவர், நேற்று நடுக்குப்பத்தில் இருந்து மினி லாரியில் தர்பூசணி பழங்களை ஏற்றிக்கொண்டு விழுப்புரம் அடுத்த பிடாகத்தில் உள்ள குடோனிற்கு வந்தார். பிடாகம் குடோன் அருகில் லாரியை திருப்ப முயன்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் தலைக்கீழாக கவிந்தது.இதில், லாரியில் வந்த சாம்பசிவம் மற்றும் குமார், 40; ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை