உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மா.கம்யூ., மாவட்ட மாநாடு

மா.கம்யூ., மாவட்ட மாநாடு

செஞ்சி: செஞ்சியில் மா.கம்யூ., கட்சியின் 2 நாட்கள் நடைபெறும் 24வது மாவட்ட மாநாடு நேற்று துவங்கியது.மூத்த உறுப்பினர் ஜெயராமன் கொடியேற்றினார். மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குமார், ராதாகிருஷ்ணன், கீதா, முத்துக்குமரன், மூர்த்தி, சங்கரன், ராஜேந்திரன், வேல்மாறன், அறிவழகன், முருகன், மாதவன், ஆல்பர்ட் வேளாங்கன்னி, பார்த்திபன், சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.மாநாட்டில், வேளாண் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை, கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய பாக்கித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் மழையில் நனையாமல் இருக்க புதிதாக ஏலக்கொட்டைகை கட்ட வேண்டும், நந்தன் கால்வாய் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ