உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

கோட்டக்குப்பம், : கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில், பொம்மையார்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.வானுார் வட்டம் பொம்மையார்பாளையம் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை ரியல் எஸ்டேட் கும்பலுக்கு கொடுப்பதை தடுக்க வேண்டும். பொம்மையார்பாளையம் ஊராட்சியில் வீடுகளின் மேல் செல்லும் 24 அடி சாலையாக அமைப்பதை தடுக்க வேண்டும். கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களையும் சீரமைத்து சிமென்ட் சாலை அமைத்து மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொம்மையார்பாளையத்தில் மா.கம்யூ., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்டக்குழு சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு முத்துக்குமரன், மாவட்டக்குழு அர்ச்சுணன், முருகன், வட்டக்குழு சேகர், சுந்தரமூர்த்தி, மாயவன், அன்சாரி, முகமது அனஸ், வாசு, ஏழுமலை, அய்யனார், தனம், கோகிலா, தனவள்ளி உட்பட பலர் பங்கற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !