மேலும் செய்திகள்
மூலக்குளம் கோவில் கும்பாபிேஷக விழா
17-May-2025
வானுார்: கிளியனுார் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.கிளியனுார் அண்ணா நகரில் உள்ள செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா கடந்த 30ம் தேதி விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், தனபூஜையுடன் துவங்கியது.நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு முதற்கால யாக பூஜையும், நேற்று 7:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று காலை 10;00 மணிக்கு செங்கழுநீர் மாரியம்மன் கோவில் விமானத்திற்கு கும்பாபிஷேகமும், அதனை தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.
17-May-2025