உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாரியம்மன் கோவிலில் மகிஷாசுர வதம்

மாரியம்மன் கோவிலில் மகிஷாசுர வதம்

விழுப்புரம்: விழுப்புரம் நாப்பாளைய தெரு சண்டபிரசண்ட மாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு மற்றும் மகிஷாசுர வதம் வைபவம் நடந்தது. இந்த விழாவையொட்டி, கடந்த செப்., 23ம் தேதி இந்திராணி யானை வாகன வீதியுலா, 24ம் தேதி துர்க்கை எருமை வாகன வீதியுலா, 25ம் தேதி வில்லி அம்மன் கத்தி, கேடயம் அலங்காரம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பூஞ்சோலை அம்மன், வராஹி அம்மன், செல்லியம்மன், கன்னிகா பரமேஸ்வரி அம்மன், மகாலட்சுமி, சரஸ்வதி அலங்காரம் நடந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மகிஷாசுரமர்த்தினி வைபவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை