உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணை தாக்ககியவர் கைது

பெண்ணை தாக்ககியவர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த பரசுரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தீர்த்தமலை மனைவி ஹேமலதா, 34; சுயஉதவி குழு தலைவி. சிவபாலன் மனைவி சந்திரவள்ளி, 31; குழுவில் உறுப்பினராக உள்ளார். இவர், உதவிக்குழு மூலம், கடன் வாங்கி, சரியாக கட்டவில்லை.நேற்று காலை தனது கணவருடன் ஹேமலதா வீட்டிற்குச் சென்ற சந்திரவள்ளி, தனக்கு மீண்டும் வங்கி கடன் வாங்கித் தர வேண்டும் என கேட்டு தகராறு செய்து, ஹேமலதா அவரது கணவர் தீர்த்தமலை ஆகியோரை திட்டி, தாக்கினார்.புகாரின் பேரில், வளவனுார் போலீசார் சந்திரவள்ளி, சிவபாலன் மீது வழக்குப் பதிந்து, சிவபாலனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ