உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தொழிலாளியை தாக்கியவர் கைது

 தொழிலாளியை தாக்கியவர் கைது

விழுப்புரம்: காணை அருகே தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். காணை அடுத்த கோனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 52; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மெடிக்கலில் மாத்திரை வாங்குவதற்காக தனது மொபட்டை நிறுத்தியுள்ளார். அப்போது, அங்கு போதையில் இருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஓம்முருகன் மகன் தாமோதரன், 30; ஏன் இங்கு வாகனத்தை நிறுத்தினாய் என கேட்டு தகராறு செய்து முருகனை தாக்கினார். புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து, தாமோதரனை கைது செய் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை