உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாலிபர்களை கத்தியால் வெட்டியவர் கைது

வாலிபர்களை கத்தியால் வெட்டியவர் கைது

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே வாலிபர்களை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். பெரிய முதலியார்சாவடியை சேர்ந்தவர் பெருமாள் மகன் ரஞ்சித்குமார், 20; அதே பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் பலராமன், 18; ஆலங்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகன் சுரேந்தர், 18; இந்த மூன்று பேரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு பலராமனின் பிறந்தநாளை, இதர இரு நண்பர்களும் சேர்ந்து, பெரிய முதலியார்சாவடி பகுதியில் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது அங்கு மதுபோதையில் வந்த அந்த பகுதியை சேர்ந்த மகேஷ்,32; என்பவர் மூவரையும் ஆபாசமாக பேசி, பேனா கத்தியால் வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த மூவரும், புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து ரஞ்சித்குமார் புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, மகேைஷ கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி