உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாரி பேட்டரி திருடியவர் கைது

லாரி பேட்டரி திருடியவர் கைது

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரத்தில் வாகன சோதனையின் போது லாரி பேட்டரி திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.கண்டாச்சிபுரம் மடவிளாகம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் அய்யானர், 45; இவர் கடந்த 23ம் தேதி ரவிச்சந்திரன் எனபவரது இடத்தில் தனது டாரஸ் லாரியை நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது லாரியில் இருந்த பேட்டரி திருடு போயிருந்தது. இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசில் அய்யனார் புகார் அளித்தார்.நேற்று அதிகாலை 3:00 மணிக்கு விழுப்புரம் - திருவண்ணாமலை ரோட்டில் சப்இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக பைக்கில் வந்த ஒடுவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த தெய்வமணி மகன் தேவராஜ், 29; என்பவரை பிடித்து விசாரித்தபோது, கடந்த சில நாட்களுக்கு முன்பு டாரஸ் லாரியில் இருந்த பேட்டரியைத் திருடியதை ஒப்புக்கொண்டார். விற்பனைக்காக வீட்டில் மறைத்து வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரியை போலீசார் பறிமுதல் செய்து, தேவராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை