உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மயிலம், : மயிலம் அருகே உள்ள சின்னநெற்குணம் கிராமத்தில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.மயிலம் அடுத்த சின்னநெற்குணம் கிராமத்தில் உள்ள தாபா ஹோட்டலில் சாப்பிட வந்த இருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த சின்ன நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு, 43; தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் கையில் வைத்திருந்த தண்ணீர் குவளையால் வடிவேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த வடிவேலு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில் வடிவேலை தாக்கிய தழுதாளி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் 42; என்பவரை மயிலம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள பார்த்திபன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ