உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் விபத்தில் தவறி விழுந்தவர் பலி

பைக் விபத்தில் தவறி விழுந்தவர் பலி

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன், 35; நேற்று முன்தினம் இரவு, நல்லாப்பாளையம் தினகரன், 37; என்பவரது பைக்கில் லிப்ட் கேட்டு சென்றார். விழுப்புரம் - திருவண்ணாமலை சாலை, கண்டாச்சிபுரம் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்ற மடவிளாகம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி, 53; என்பவர் மீது தினகரன் ஓட்டி சென்ற பைக் மோதியது. இதில் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த அறிவழகன் நிலை தடுமாறி கிழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.பைக் ஓட்டி வந்த தினகரன், நடந்து சென்ற சுப்ரமணி முண்டிம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ